News Just In

5/20/2021 08:13:00 AM

சுகாதார வழிமுறைகள் தொடர்பில் ஆலோசிக்க வர்த்தகர்களை சந்தித்த அரச அதிகாரிகள்!!


நூருள் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலகமும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் சேர்ந்து ஏற்பாடு செய்த பெண்கள் சந்தையில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களுக்கான சுகாதார நடைமுறை தொடர்பான கலந்துரையாடலும் விழிப்புணர்வு நடவடிக்கையும் நேற்று (19) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பெண்கள் சந்தையில் ஏற்படும் சனநெரிசலை குறைக்க மாற்று வழிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய வர்த்தகம் நடைபெற வேண்டும் என்றும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எட்டப்பட்டது.

இந் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல், பிரதேச அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.முபாறக், கிராம நிலதாரி எப்.ஜெஸ்மின், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சந்தை வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.





No comments: