News Just In

5/20/2021 10:28:00 AM

பொது மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்...!!


இலங்கையில் 55 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வைத்தியசிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 55 வயதுக்குட்பட்ட குறித்த நபர்களுக்கு, கொரோனா தொற்று என சந்தேகப்படக் கூடிய அறிகுறிகள் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களிலும் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரை அல்லது வைத்தியசாலையை நாடுமாறும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமையை கருத்திற் கொண்டு இந்த அறிவுறுத்தலை இராணுவ தளபதி விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: