News Just In

5/12/2021 08:39:00 AM

6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில்...!!


இலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப்பிரிவு, கொல்லமுன கிராம சேவகர் பிரிவு மாபே மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டன.

கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே பொலிஸ் அதிகாரப்பிரிவு, எலபிட்டிவல நவ மஹர கிராமம், மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன் வீதி ஆகியனவும் காலி மாவட்டத்தின் இமதுவ பொலிஸ் அதிகாரப்பிரிவு, திக்கும்புர கிராம சேவகர் பிரிவு, அடநிகித கிராம சேவகர் பிரிவு என்பனவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை பொலிஸ் அதிகாரப்பிரிவு, சன்னஸ்கம கிராம சேவகர் பிரிவு, தொம்பகஸ்வின்ன கிராம சேவகர் பிரிவு, கொடகம கிராம சேவகர் பிரிவு, கஹவத்த காவல்துறை அதிகாரப்பிரிவு, கட்டங்கே கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டன.

அதேபோல ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெ பொலிஸ் அதிகாரப்பிரிவின் சூரியவௌ நகரமும் கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு, உடபொத்த கிராம சேவகர் பிரிவு, கெந்தாவ கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் அதிகாரப்பிாிவுக்கு உட்பட்ட கலுஹக்கல மற்றும் பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும் களுத்துறை தொடங்கொட பொலிஸ் அதிகாரப் பிாிவுக்கு உட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிாிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: