அதன்படி நேற்றைய தினம் 2,568 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 131,098 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு கூறியுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களில் 2,530 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஏனைய 38 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 1,030 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையினால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 106,641 ஆக காணப்படுகிறது.
தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 23,607 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்யை (11) தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.
அதற்கமைவாக இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 827 இல் இருந்து 850 ஆக அதிகரித்துள்ளது.



No comments: