இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி - மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 5 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கல்லூரியில் இம்முறை 13 மாணவிகள் உயர்தர பரீட்சையில் தோற்றி அதில் 5 மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், எச்.எப்.ருக்சானா 3 A, ஏ.பீ.எப். றில்ஹானா 2 A, 1 C, எம்.பீ.அஸ்ரிபா 2 A,1 B, பீ.எம்.யூ.ஏ.அம்மாறா 2 A, 1 B, எஸ்.எப்.சஹ்னாஸ் A,B,C பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இவ்வாறு சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவிகளுக்கு கல்லூரி நிருவாகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
No comments: