சித்திரைப் பூரணைக்கு பத்து நாட்களுக்கு முன்னர் கொடியேற்றம் இடம்பெற்று பத்துநாள் திருவிழா சிறப்புற மேற்கொள்ளப்பட்டது. மாம்பழத் திருவிழா, திருவேட்டைத் திருவிழா, தேர்த்திருவிழா எனப் பல்வேறு அம்சப் பூசைகள் இடம்பெற்று இறுதி நாள் உற்சவமாக இந்தத் தீர்த்தோற்சவம் இடம்பெறுகின்றது.
இன்று அதிகாலை அபிடேக ஆராதனைகளுடன் பூசை இடம்பெற்று பின்னர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சுவாமி பவணி சென்று மதியம் 12.16 மணியளிவில் மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
கொரோணா காரணங்களினால் தீர்த்தோற்சவ பவணிக்கு மட்டுப்படுது;தப்பட்ட அடியவர்கள் கலந்து கொள்ளச்செய்யப்பட்டதுடன், தீர்த்தோற்சவத்திற்கும் குறிப்பிட்டளவு அடியவர்களே கலந்துகொள்ளச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: