News Just In

4/06/2021 12:42:00 PM

மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க அமைச்சரவை அனுமதி!!


இலங்கையில் மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கும், போட்டித்தன்மை மூலம் மிகவும் வினைத்திறனான விலைப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமான வகையில் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான 15 பொருளாதார மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றது.

அதற்கமைய மட்டக்களப்பு மற்றும் வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன், யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முதலாம் கட்ட கட்டுமானப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. 

குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ நிதியத்தை நிறுவுவதற்கும் முறையான பொறிமுறையை பின்பற்றி குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபார அலகுகளை ஒதுக்கி வழங்குவதற்கும் கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments: