இதற்கமைய கர்ப்பிணித் தாய்மார்களின் நுரையீரலை கொரோனா வைரஸ் கடுமையாகப் பாதிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கர்ப்பிணித் தாய்மார் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிக அளவில் காணப்படுவதாகவும், பெரும்பாலான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோய் அறிகுறிகள் அதிகரித்துள்ளதாகவும், மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் மயூரமான தேவாலகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய நிலையில் மூன்று கர்ப்பிணித் தாய்மார் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வண்ணம், கர்ப்பிணித் தாய்மார் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என, மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் மயூரமான தேவாலகே தெரிவித்துள்ளார்.
ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நோய் அறிகுறிகள் காணப்படுமானால் கர்ப்பிணித் தாய்மார் உடனடியாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்வது முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments: