News Just In

4/17/2021 07:16:00 PM

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கல்குடா தொகுதியில் றமழான் மாதத்தினை முன்னிட்டு பேரீத்தம்பழம் வழங்கி வைக்கப்பட்டது!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
றமழான் மாதத்தினை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்களுக்கு பேரீத்தம்பழம் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கல்குடா தொகுதியில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடா கிளை காரியாலயத்தில் பேரீத்தம்பழம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதி தலைவர் மௌலவி ஏ.பி.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தென்னை மற்றும் சிறு கைத்தொழில் இராஜங்க அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளருமான என்.எம்.சுஐப், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா தொகுதி செயற்பாட்டாளர்களான எஸ்.எம்.சிம்ஸான் மற்றும் என்.எம்.எம்.சியாம், சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர், பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட பேரீத்தம்பழ பெட்டிகள் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட நாற்பத்தி ஏழு (47) பள்ளிவாயல்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.











No comments: