News Just In

4/28/2021 08:10:00 AM

கொரோனா தொற்று அச்சநிலை- மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில்...!!


இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.​

அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு, உஹன பிரதேசத்தை சேர்ந்த குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.​

கொவிட் பரவலை தடுக்கும் வகையில் குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

No comments: