News Just In

4/28/2021 08:22:00 AM

நேற்று ஒரே நாளில் 1096 பேருக்கு கொரோனா தொற்று- 08 பேர் உயிரிழப்பு; இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா நிலவரம்...!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (27) உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 655 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் ஒரே நாளில் 1,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன் முறையாக ஒரே நாளில் ஆயிரம் தொற்றாளர்களை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதனடிப்படையில் இலங்கையில் 103,472 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 276 பேர் நேற்று (27) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,856 ஆக அதிகரித்துள்ளது.


No comments: