News Just In

4/26/2021 08:47:00 PM

மட்டக்களப்பில் நடைபெற்ற தந்தை செல்வா அவர்களின் 44ஆவது நினைவு தினமும் மாபெரும் இரத்ததான முகாமும்...!!


இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்களின் 44 ஆம் வருட நினைவு தினம் இன்று(26) மட்டக்களப்பு வாவிக்கரை பூங்காவில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவு தின நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, மா.நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார், மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் தலைவர் தீபாகரன், உட்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதே வேளை இலங்கையில் நிலவிவரும் குருதி தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இன்றைய தினம் தந்தை செல்வா அவர்களின் நினைவாக களுவாஞ்சிக்குடியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் அலுவலகத்தில் மாபெரும் இரத்த தான நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் சுகாதார விதிமுறைகளோடு பெருமளவானோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













No comments: