News Just In

4/02/2021 08:28:00 PM

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 294 பேர் பூரணமாக குணமடைவு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (01) மேலும் 294 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 89,701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 93,037 ஆக அதிகரித்துள்ளது.

No comments: