ஆண், பெண், கலப்பு என்ற வகையில் வெவ்வேறு பிரிவுகளாக நடாத்தப்பட்ட போட்டிகளில் EDS, COLKID என இரு அணிகளாக 80 இற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பற்றினர்.
போட்டிகளில் அதிகூடிய வெற்றிகளை ஈட்டி பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் "HECS" ( உயர் கல்விசார் கலந்தாய்வு பணிகள் அமைப்பு ) சவால் கிண்ணத்தை COLKID அணி பெற்றுக் கொண்டது.
பெண்போட்டியாளர்களில் விசேட திறமையை வெளிப்படுத்திய வடமுனையைச் சேர்ந்த செல்வி.சந்திரன் டிலுசாலினிக்கு விசேட கெளரவம் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுக்கு கல்வி அபிவிருத்தி சங்க ஸ்தாபகர் திரு.சி.தேவசிங்கன், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் பங்குபற்றி மாணவர்களுக்கு வெற்றி கிண்ணமும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.



















No comments: