News Just In

3/17/2021 04:46:00 PM

சம்மாந்துறை வைத்தியசாலையில் கமரா மூலம் கருப்பைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சை!!


நூருல் ஹுதா உமர்
முதன்முறையாக நேற்று (16) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கமரா மூலம் கருப்பைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சையை பெண் நோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.சி.எம். முஸ்தாக் வெற்றிகரமாக செய்துள்ளார்.

இரண்டாம் கட்ட கால (12-28வாரங்கள்) கர்ப்பிணித் தாய்மார்களின் கருப்பைக் கழுத்து சுயமாக விரிவதனால் கரு கலைந்து தாய்மார்களின் கனவுகளும் கரைந்து விடுகின்றன. இவ்வாறு கரு கலையும் போது கருப்பை கழுத்தை யோனியூடாக கட்டி குழந்தையைப் பாதுகாப்பாக பிறக்க வைப்பதற்கு செய்யும் சத்திர சிகிச்சையை Cervical cerclage என அழைப்பர். Cervical cerclage செய்தும் கரு கலைந்தால் வயிற்றினூடாக கருப்பைக் கழுத்தானது Mersilene tape மூலம் கட்டப்பட்டு கருப்பை விரிவு தடுக்கப்பட்டு பிள்ளைப் பேறு பாதுகாப்பாக இடம் பெறுகின்து. இதை Laparascopy மூலம் செய்யும் போது, இது Laparascopic abdominal cerclage என்றழைக்கப்படும்.

இவ்வாறான சத்திரசிகிச்சையை தாய்மார்களின் நலன் கருதி சிறந்த சேவையாக செய்து வரும் பெண் நோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.சி.எம். முஸ்தாக் அவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.




No comments: