வகுப்பொன்றில் ஆகக் கூடுதலாக 15 மாணவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வகுப்பொன்றில் 30 மாணவர்கள் காணப்பட்டால், அவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து நாளொன்றுக்கு 15 பேரை மாத்திரம் வகுப்பில் இருக்கச் செய்ய முடியும். மேலும், வகுப்பில் 45 மாணவர்கள் காணப்பட்டால், அவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து வகுப்புக்களை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு வகுப்பில், ஒவ்வொரு நாளும் சங்கிலித் தொடராக 15 மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதலுடன், மாணவ சமுதாயத்தை மன உளைச்சலுக்கு உட்படாதவாறு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படுவதுடன், போட்டிகள் மற்றும் பரீட்சைகள் போன்ற எதையும் தற்போதைக்கு நடத்த வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
No comments: