News Just In

3/27/2021 07:05:00 PM

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் நேர்மையான செயற்பாடு - பலரும் பாராட்டு!!


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீதியில் அநாதரவாகக் கிடந்த பேர்ஸ் ஒன்றை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பணம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உட்படப் பல ஆவணங்களுடனான கைய்பைய்யொன்றை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டு எடுத்து அதனை உரியவரிடம் இன்று வெள்ளிக்கிழமை (26)மாவட்ட பொலிஸ் அதியட்சகர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகஸ்தரான ஆர்.பி.டி.துமிந்த என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே மேற்படி பணப்பையைக் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவம் குறித்துத் தெரியவருகையில்,

அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்குக் கடமைக்கு வந்து கொண்டிருந்தபோதே மாவடி முன்மாரி பகுதியில் வீதியில் கிடந்த பணப்பையைக் கண்டெடுத்துள்ளார்.

குறித்த பணப்பையில் 11300.00 ரூபாய் பணம், சாரதி அனுமதிப்பத்திரம், ATM அட்டை, வாகன காப்புறுதி, தேசிய அடையாள அட்டை உட்படப் பல ஆவணங்கள் அடங்கியிருந்தன.

இது தொடர்பில் அறிந்த மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை அழைத்து பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், பணப்பையை உரியவரிடம் வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டார்.

குறித்த பணப்பைக்குச் சொந்தக்காரரான முனைக்காட்டைச் சேர்ந்த குணரட்ணம் கனிஸ்டன் உயர் வகுப்பு மாணவனிடம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க பணப்பையை ஒப்படைத்தார்.

பணப்பையைக் கண்டெடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வாரமே மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவருக்கு இவ்வருடத்திற்கான சாதனை படைத்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் விருதும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: