News Just In

3/27/2021 06:56:00 PM

அண்மையில் கைதுசெய்யப்பட்ட 54 தமிழக மீனவர்களும் விடுவிப்பு!!


இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக அண்மையில் கைதுசெய்யப்பட்ட 54 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களில் நேற்று வரையில் 40 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) ஏனைய 14 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து படகுகளும் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை விசேட சுற்றிவளைப்புக்களின் போது, இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதாக 54 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களின் ஐந்து படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: