திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இம்மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு இராணுவத்தினரால் இன்றைய தினம்(29)
தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இம்மாவட்டத்தின் கந்தளாய், மூதூர், சேருவில,மற்றும் வெருகல், திருகோணமலை நகரம் போன்ற அனைத்துப்பகுதிகளிலும் இராணுவத்தினரால் முகக்கவசங்களின் முக்கியத்துவம் தொடர்பாக குழுமியிருக்கும்,முகக்கவசமின்றி வீதியால் செல்லும் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் அண்மையில் நாற்பது பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
(எப்.முபாரக்)
No comments: