இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான உடல் கட்டழகு போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டு தங்க பதக்கங்களையும், ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் அடங்கலாக நான்கு பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளது.
இதில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சார்பில் 75 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்குபற்றிய கி.ஜீஜானந்த் தங்கப் பதக்கத்தையும், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்பில் 65 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்குபற்றிய டியோன் ஒரு தங்க பதக்கத்தையும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் சார்பில் 55 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்குபற்றிய றிபாஸ் வெள்ளி பதக்கத்தையும், 60 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்குபற்றிய அயாஸ் வெண்கல பதக்கத்தையும் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
No comments: