கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் முகத்துவாரம் பகுதியில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தொடர்ந்தும் இவ்வாறான குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே, பண்டிகை காலத்தில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக 5,000 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது போலி நாணயத்தாள் குறித்து கவனமாக செயற்பட வேண்டும்.
அவ்வாறு போலி நாணயத்தாள்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின் அருகிலுள்ள காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
No comments: