News Just In

3/03/2021 08:36:00 PM

இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை- மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும!!


குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

அந்தவகையில் இந்த மாதம் 6 ஆம் திகதி முதல் அவர்களுக்கு மின்சாரத்தை வழங்க சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் மின்சாரம் இல்லாத வீடுகளை அடையாளம் கண்டு, ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

No comments: