News Just In

3/03/2021 03:41:00 PM

பிரித்தானிய உண்ணாவிரதிக்கு வலுச் சேர்ககும் வகையில் மட்டக்களப்பிலும் சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்..!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதி வேண்டி வட- கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஞா. சிறிநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





No comments: