எஸ்.கே.ஓ. விளையாட்டு கழகத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கராத்தே மாணவர்களுக்கான தரப்படுத்தல் சான்றிதழ் வழங்கும் வைபவம் திங்கட்கிழமை(01) மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
அனைவருக்கும் தெரிந்திருக்கும் எஸ்.கே.ஓ விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பங்கு 2004ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இன்றி அமையாத ஒரு விடயமாக இருந்து வருகின்றது.
இதன் அடிப்படையில் 2020ஆம் ஆண்டிற்கான மாணவர்களை தரப்படும் நிகழ்வானது கொவிட் தொற்று காரணமாக தடைப்பட்டிரு போதும் அது தற்போது நடைபெற்று முடிந்துள்ளமை.
கிழக்கு மாகாணத்திலே அதிகளவு கராத்தே வீரர்களைக் கொண்ட ஒரே எஸ்.கே.ஓ. விளையாட்டு கழகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






No comments: