News Just In

3/12/2021 09:45:00 AM

வாகன விபத்தில் 16 வயது மாணவர் பலி!!


ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதால் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த உந்துருளியில் பயணித்த நபர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments: