இதனால் இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 86,989 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 288 பேர் மினுவாங்கொட - பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
ஏனைய 12 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும், நான்கு பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் ஆவர்.
தற்சமயம் மினுவாங்கொட - பேலியகொட கொவித் கொத்தணிப் பரவலில் சிக்கிய நோயாளர்களின் எண்ணிக்கையும் 82,640 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 351 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 83,561 ஆக காணப்படுகிறது.
தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 2,908 பேர் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 383 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 515 இல் இருந்து 520 ஆக அதிகரித்துள்ளது.
No comments: