News Just In

2/06/2021 02:58:00 PM

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது - மனோ கணேசன்..!!


(சந்திரன் குமணன்)

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்....

தமிழரும் முஸ்லீமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.இது கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடந்துகொண்டு இருக்கின்றது .

இந்த அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் அணிதிரண்டு இருக்கின்றார்கள். என்றும் துணையாக நான் களமிறங்குமிறங்குகின்றேன்.






No comments: