News Just In

2/06/2021 06:41:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62594 ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 133 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 256 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 505 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 343 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: