News Just In

2/06/2021 02:41:00 PM

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய மாணவர்களுக்கு குரான் பிரதிகள் வழங்கிவைப்பு..!!


(நூருல் ஹுதா உமர்)

ஜோர்தான் நாட்டின் ஸம்ஸம் சர்வதேச தொண்டு நிறுவன அனுசரணையில் இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் கல்முனை கல்வி வலய நற்பிட்டிமுனை கமு/ கமு/ லாபீர் வித்தியாலய மாணவர்களுக்கு குரான் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல், மாணவர்களின் கல்விக்கு கைகொடுத்தல் என பல சமூக நல வேலைத்திட்டங்களை பைத்துல் ஹெல்ப் அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ரைஸுல் ஹக்கீம் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.








No comments: