News Just In

2/06/2021 02:46:00 PM

திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றத்தில் குறி வைக்கும் அரசு..!!


(எப்.முபாரக்)

திருகோணமலை மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இவ் அரசாங்கம் செய்ய திட்டம் வகுத்து வருகின்றது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று(6) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

நாட்டின் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் முழு நோக்கும் திருகோணமலை மாவட்டம் அரசியல் ரீதியில் முன்னுரிமை பெற்றுவதற்கு சிங்களப் பெரும்பான்மையை ஏற்படுத்தும் திட்டமே!

இதன் அடிப்படையில் வாக்கு வீதத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் சுமார் 90,000 வாக்ககுகளை சிங்கள குடியேற்றங்களால் தாண்டி இரண்டாம் இடத்தை பிடிக்க எடுக்கும் முயற்சியில் இன்னும் பல சிங்கள கிராமங்களை உருவாக்கி காலம் செல்ல செல்ல மீண்டும் முஸ்லிம்களின் சுமார் 120,000 வாக்கு வீதத்தையும் முந்தி அடிக்க ஒரு திட்டத்தை வரைந்துள்ளது இந்த அரசாங்கம்.

இதில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படவேண்டும். இந்த திட்டம் கூடுதலாக முஸ்லிம் கிராமங்களை அன்மித்தாகவே அமையவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

தற்போதைய உடனடி அமுலில் வரும் விதமாக மூதூர் தோப்பூர் ஆரம்பித்து கிண்ணியா கண்டலடி ஊற்று வரை இந்த திட்டம் வரையப்பட்டு இதற்கிடையில் சுமார் 4 பௌத்த விகாரை களை நிறுவுவதற்கு படைகளின் உதவி தேடப்பட்டுள்ளது என்றும்,
இதை தாம் எப்படி நிறுத்துவது பற்றி சிந்தித்து வருகின்றார்கள்.

இதற்காக வேண்டி அரசாங்கம் நிறைவேற்ற மூதூர் தொகுதியில் அரசாங்கத்தின் சார்பாக அமைப்பாளர்கள் என்ற வடிவில் ஒரு சிங்கள் அமைப்பாளர் ஒருவர் நியமித்து பெயர் அளவில் ஒரு முஸ்லிம் ஒருவரையும் நியமித்துள்ளதை நாம் மிகவும் காணக்கூடியதாக உள்ளது.

சமூக உணர்வுள்ள சிவில் அமைப்புக்கள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள், விவசாய சங்கங்கள், உலமாக்கள், பொது மக்கள் இது பற்றி மிகவும் ஆழமாக சிந்தித்து அரசுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments: