News Just In

12/04/2020 08:32:00 PM

கிளிநொச்சி - பொது வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய பாலை மரம் முறிந்து விழுந்ததில் பயணிகள் பேரூந்து மயிரிழையில் தப்பியது...!!


கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஏ-09 நெடுஞ்சாலையில் அருகாமையில் நின்றிருந்த பாலைமரம் சரிந்து வீழ்ந்ததில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

6 மணியளவில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றிருந்தது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரச பேருந்து நூலிழையில் விலத்தியதால் பயணிகள் மிகப் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துள்ளனர்.

மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை கரைச்சி பிரதேசசபை முன்னெடுத்திருந்தது. தற்போது போக்குவரத்து இயல்புக்கு திரும்பியுள்ளது.








No comments: