News Just In

12/02/2020 08:59:00 AM

இளைஞர்களுக்கு ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புக்கள்!



14 துறைகளில் விசேட ஆற்றல்களைக் கொண்ட இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

2019 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, குறித்த தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள, ஜப்பான் மொழி தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்காக ஆற்றல் மற்றும் அனுபவம் என்பன கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், 18 தொடக்கம் 48 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான கலந்துரையாடலொன்று, அண்மையில் காணொளி மூலம் இடம்பெற்றதாக, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், ஜப்பான் நீதி அமைச்சின் உதவி பிரதி அமைச்சர் தலைமையிலான 18 பேரை கொண்ட பிரதிநிதிகளும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தவின் தலைமையிலான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 7 பேரும், ஜப்பான் இலங்கை தூதுவர் மற்றும் அதன் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: