உயிரியல் பரிசோதனைகளின் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு குறைடைந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கொரோனாப் பரவலைத் தடுக்க, தொடர்ந்தும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது, மக்களின் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், கொழும்பு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்டோர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த முதலாம் திகதி முதல் கடந்த 29 ஆம் திகதி வரை, கொழும்பு மாவட்டத்தில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நான்கு கொரேனா தொற்றாளர்கள், அடையாளங் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: