நடாளுமன்றில் இன்று உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் வடக்கில் கைத்தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஏற்கனவே வடக்கில் இரு இடங்களில் ஆடைத் தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்படி கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பற்றிக் ஆடைத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments: