News Just In

12/03/2020 03:52:00 PM

மட்டக்களப்பில் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தேசிய விழிப்புணர்வு செயற்திட்டம்..!!


மட்டக்களப்பு நகர் புற மக்களையும் கிராமப்புற மக்களையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் முகமாக கொரோனா விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் ஒட்டும் செயற்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது முதற்கட்டமாக பேரூந்துகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகமாக கிராம்ப்புறங்களுக்கோ, அல்லது நகரப்புறங்களுக்கோ சென்று வரும் வாகனமாக கருதப்படும் முச்சக்கர வண்டிகளில் கொரோனா தடுப்பு தொடர்பான ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டு, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் அது தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

குறித்த செயற்திட்டத்தினை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், சுகாதார திணைக்களம் மற்றும் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து மேற்கொண்டிருந்தன.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியகஸ்தகர் நுவான் மெண்டிஸ், சுகாதார திணைக்கத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு வைத்திய அதிகாரி மேகலா ரவிச்சந்திரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் ஆலதீன் அமீர் உட்பட பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், சுகாதார பிரிவு அதிகாரிகள் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















No comments: