News Just In

12/02/2020 10:01:00 AM

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!


மஹர சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட களேபரத்தினால் உயிரிழந்த 11 கைதிகளில் 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அந்த சிறை வளாகத்தில் இடம்பெற்ற களேபர நிலைமைகளினால் இதுவரை 11 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளார்கள்.

இவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே உயிரிழந்த 11 கைதிகளிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 9 கைதிகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஹர சிறையில் இடம்பெற்ற களேபர நிலைமையால் சுமார் 107 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: