News Just In

12/01/2020 06:39:00 PM

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு- 107 பேர் காயம்!!


மஹர சிறைச்சாலை அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவத்தில் 107 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: