News Just In

11/01/2020 03:31:00 PM

யாழ். உடுவில் பகுதியில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச சபையினர்,உடுவில் பொது சுகாதார பரிசோதகர்கள் , சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலீசார் உதவியுடன் உடுவில் கிராமத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள், மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வுகளும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதோடு, குறித்த பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






No comments: