News Just In

10/27/2020 06:25:00 PM

மின்சார சபைக்கு மின்சக்தி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிதிகளின் மின் விநியோத் தடையை மேற்கொள்ள வேண்டாமென மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மின்சார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டுக்குள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதன் மூலம் மின்சார துறையை கட்டியெழுப்புவதற்கும், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: