News Just In

10/28/2020 02:21:00 PM

வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறத்தல் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவித்தல்!!


இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 2ஆம் திகதி காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை, கொத்தட்டுவை, முல்லேரியா, மருதானை, தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு விடுக்கபட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கபட்டுள்ளது.

கொழும்பின் இந்த பகுதிகள் தவிந்த ஏனைய பகுதிகளிலேயே எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்து பொருட்கள் விற்பனை நிலையம் ஆகியவற்றை நாளைய தினம் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை காலை 8 மணி முதல் நாளை இரவு 10 மணிவரை குறித்த விற்பனை நிலையங்களை திறந்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிக்குப் பின்னர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாரத்துக்கு இரு முறை மாத்திரம் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

No comments: