ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய கிராமங்கள் தோறும் அமுல்படுத்தப்படும் சப்ரிகமக் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 9 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 79 கிராம அபிவிருத்தி திட்டங்கள் தற்பொழுது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சப்ரிகமக் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் இப் பிரதேச செயலாளர் பிரிவில் வீதி அபிவிருத்தி, குடிநீர் வசதிகள், பாடசாலை சுகாதார வசதிகள், சிறந்த வடிகாலமைப்பு, பொதுச் சந்தைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்கள், கல்வெட்டுக்கள் நிறுவும் பணிகள் சீராக இடம்பெற்று வருவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தெரிவித்தார்.
இந்த விசேட திட்டத்தின் கீழ் இப் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் இருதயபுரம் மேற்கு கிராமசேவகர் பிரிவின் இருதயபுரம் 11ம் குகுறுக்கு பதினாறாம் குறுக்கு பகுதியில் இரு புதிய வீதிகளை அமைப்பதற்கான அபிவிருத்தி பணிகளை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சூசைப்பிள்ளை பிலிப், உட்பட அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அமுல்ப்படுத்தப்படும் இந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிராமப் புறங்களில் உள்ள வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்கு இடைஞ்சலாக இருந்த பல அபிவிருத்தித் தடைகள் நீக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இங்கு கருத்து வெளியிட்டார்.





No comments: