கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் பொது சுகாதார பரிசோதகர்களின் இலகுவான போக்குவரத்து கடமைகளுக்காக புதிய மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு முன்வந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத் தலுக்கு அமைய சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராய்ச்சியின் வழிகாட்டுதலில் இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு விநியோகிக்கப் பட்டுவருகின்றன.
இந்த ஏற்பாட்டுக்கமைய கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கடமையாற்றி வரும் பொது சுகாதார பரிசோதனைகளுக்கு இன்று(3௦) இந்த மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் பணிகள் இடம்பெற்றன.
இதன்படி இதன்படி சுகாதார அமைச்சு வழங்கி வைக்கும் மோட்டார் சைக்கிள்கள் முதல் கட்டமாக இன்று கிழக்கு மாகாணத்தில் சுமார் 59 பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முதல் கட்டமாக இந்த மோட்டார் சைக்கிள்கள் விநியோ கிக் கப்பட்டன. இதன்படிமட்டக்களப்புமாவட்டத்தில் 18 பேருக்கும் அம்பாரை மாவட்டத்தில் 19பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் பதின்நான்கு பேருக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 8 பேருக்குமாக 59 மோட்டார் சைக்கிள்கள் இன்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகவளவில் வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் 18 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த புதிய மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். நாகலிங் கம் மயூரன், பிறவி சுகாதார சேவைகள் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி எம். அச்சுதன் பிராந்திய தொற்று நோயி யலாளர் டாக்டர் வே. குணராஜ சிங்கம், பிராந்திய பல் வைத்திய சேவை பணிப் பாளர் டாக்டர் கே. முரளிதரன் உட்பட பல வைத்திய அதிகாரிகளும் பொதுச்சுகாதார பரிசோதகர் களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.










No comments: