News Just In

10/27/2020 10:39:00 AM

மட்டக்களப்பு- வவுணதீவு காட்டுப் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மீட்பு!!


மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் காட்டுப் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்

வவுணதீவு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக பயன்படுத்தக்கூடிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் கட்டுத் துப்பாக்கியை காந்திநகர் காட்டுக்குள் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வவுணதீவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை இன்று செவ்வாய்கிழமை 27 ஆம் திகதி நீதிமன்றில் ஒப்படைப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

No comments: