News Just In

10/30/2020 03:18:00 PM

இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரன நியமனம்!!


எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2019 மே மாதம் 29 ஆம் திகதி இலங்கையின் 17 ஆவது விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ், நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அந்தப் பதவிக்கு சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்

No comments: