சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குசட்டத்தினை தொடர்ந்து நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களில் ஒன்றாக காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
முழுநேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும் தற்போது தினமும் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுலில் காணப்படுகிறது.
இந்த நிலையானது தொடர்ந்து நீடிக்குமா என எமது செய்திப்பிரிவு வினவியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
6/25/2020 11:25:00 AM
ஊரடங்கு உத்தரவு; சற்றுமுன் வெளியான அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: