தரம் 01 மாணவர்களின் மாதிரி சந்தையும் நாணயக் கண்காட்சியும் மக்கள் வங்கியின் மட்டக்களப்பு பிரதான கிளையின் (அரசடி கிளை) அனுசரணையில் மட்டக்களப்பு-கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் சனிக்கிழமை (29.02.2020) சிறப்பாக நடைபெற்றது.
நிதி மற்றும் சந்தை தொடர்பான அறிவினை பாடசாலை மாணவர்களுக்கு பிரயோக ரீதியாக விளக்கவும், மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில்,
மட்டக்களப்பு மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் தினேஷ்குமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சிவானந்தா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் மதிமோகன், உப அதிபர் அருளானந்தம் ஆகியோருடன்,
சிவானந்தா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகளிர் கல்லூரி, கல்லடி சக்தி வித்தியாலயம், கல்லடி விநாயகர் வித்தியாலயம் மற்றும் கல்லடி விபுலாநந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து 200இற்கும் அதிகமான மாணவர்களுடன் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் புராதன நாணயத்தாள்கள் ஒல்லாந்தர் மற்றும் போர்த்துக்கேயர் கால நாணயக்குற்றிகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், சிவானந்தா தேசிய பாடசாலையில் மக்கள் வங்கியினால் அமைக்கப்பட்ட சிறுவர் சேமிப்பு அலகும் இதன்போது திறந்துவைக்கப்பட்டது.
3/02/2020 12:40:00 PM
Home
/
உள்ளூர்
/
கல்லடி
/
மட்டக்களப்பு
/
கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற "மாபெரும் சிறுவர் சந்தை மற்றும் நாணயக் கண்காட்சி"
கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற "மாபெரும் சிறுவர் சந்தை மற்றும் நாணயக் கண்காட்சி"
Subscribe to:
Post Comments (Atom)













No comments: