News Just In

3/02/2020 01:23:00 PM

மட்டு மாநகர பதில் முதல்வரால் வீதி அபிவிருத்தி வேலைகள் இன்று ஆரம்பித்து வைப்பு!!


மட்டக்களப்பு மாநகரசபையின் வரவுசெலவு ஒதுக்கீட்டின் மூலம் சல்லிப்பிட்டி பிரதான வீதி கொங்கிறீற்று விதியாகப் புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்றைய தினம் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் மாநகரசபைப் பதில் முதல்வர் ம.நிஸ்கானந்தராஜா அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் மாநகரசபைப் பதில் முதல்வர் உட்பட மாநகரசபை உறுப்பினர்களான திருமதி சசிகலா, து.மதன், புளியந்தீவு தெற்கு சனசமூக நிலைய உறுப்பினர்கள், ரிதம் இளைஞர் கழக உறுப்பனர்கள், சல்லிப்பிட்டி ஞான வைரவர் ஆலய நிருவாகத்தினர், பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அ.கிருரஜன் அவர்களின் முன்மொழிவின் மூலம் மாநகரசபையின் வருட பாதீட்டில் ரூபா 1.4 மில்லியன் செலவில் 128 மீட்டர் தூரத்திற்கு இவ்வீதி கொங்கிறீற்றிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் ஆணையாளர் உட்பட்ட குழு மாநகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் பொருட்டு இந்தியா பயணமாகி உள்ளதால் பதில் முதல்வராக ம.நிஸ்கானந்தராஜா அவர்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



























No comments: