
யாழ்ப்பாணம் – பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியில், நேற்று (சனிக்கிழமை) இரவு 10 மணியளவில் கிளிநொச்சியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மகேந்திரா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது,
இதன்போது, மோட்டர் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி ஜெயந்திபுரத்தை சேர்ந்த நா.பிரசாந்த் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், மகேந்திரா வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: