News Just In

3/01/2020 09:40:00 PM

கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற "புனித சமாதானம்" நூல் வெளியீட்டு நிகழ்வு

(படுவான் பாலகன்)
வைத்தியர் நாகமுத்து பன்னீர்செல்வம் எழுதிய புனித சமாதானம் நூல் வெளியீட்டு விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று(29) சனிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, நூலாசிரியரிடமிருந்து நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நூலுக்கான நயவுரையை மாமாங்கம் ஜீவரெட்ணம் வழங்கினார். ஏற்புரையை நூலின் ஆசிரியர் நிகழ்த்தினார்.

இதன்போது, நூலாசிரியரினால் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட தடம், விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள் என்ற நூல்களின் பிரதிகளும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், பிரதேசத்தில் இருந்து கற்று பொறியியல், மருத்துவம், உயிரியல் போன்ற துறைகளுக்கு தெரிவானர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையுடன், சிறந்த சமூகப்பணியாற்றியவர்களும், முன்னாள் அதிபர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

No comments: