News Just In

2/19/2020 02:22:00 PM

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொலித்தீன் பாவனையற்ற சூழலை உருவாக்கும் விசேட திட்டம்!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பசுமையான மற்றும் பொலித்தீன் பாவனையற்ற சூழலை உருவாக்கும் விசேட திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.சி. ராகல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் வேம்பு மற்றும் மதுரை மரக்கன்றுகள் நடப்பட்டன.

காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக சுற்றாடலில் பயன்மிக்க மரக்கன்றுகளை நாட்டப்படுவதுடன் பொலித்தீன் பாவனையற்ற சமுதாயத்தை உருவாக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

இம்மரக்கன்றுகளை பல்கலைக்கழக சமூகம் பராமரித்துப் பாதுகாப்பதாக இங்கு உறுதியெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: